திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தகவல் பெறும் உரிமைச் சட்ட வாரம்

மதுரை: அக்டோபர் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களின் நடவடிக்கைகள், ஊழியர்களின் செயல்பாடுகள், மக்களுக்குத் தேவையான பல பயனுள்ள தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொது மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

பொது மக்களுக்கு மிகவும் இன்றியமையாத இந்த சட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 12 ம் தேதி அமலுக்கு வந்தது. இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவைக் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியது.

அதில், தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவை அக்டோபர் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை கடைப்பிடிக்க வேண்டும். அந்தச் சட்டம் தொடர்பாக, பயிலரங்குகள், கருத்தரங்கங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழா கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

அரசின் செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க உதவும் என்று
கூறப்படும் "தகவல் உரிமைச் சட்ட"த்தின் முழு
 வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள்.

எங்கள் பார்வைகளை வைக்கிறோம். தொடர்ந்து விவாதிப்போம்.

படித்ததில் பிடித்த கவிதை - முதல் மழைத்துளி


சில மழைத்துளி
சுடும்...

சில மழைத்துளி
குளிரும்...

சில மழைத்துளி
மணம் வீசும்...

சில மழைத்துளி
நேசம் பேசும்...

சில மழைத்துளி
பசி போக்கும்...

சில மழைத்துளி
ருசிக்கும்...

சில மழைத்துளி
கவிதை தரும்...

சில மழைத்துளி
கவலை தரும்...

சில மழைத்துளி
பகைக்கும்...

சில மழைத்துளி
நகைக்கும்...

இன்னும் பல
மழைத்துளி விழும்...

இன்னும் பல 
வினை செய்யும்...

நீ என்னையும்
நான் உன்னையும்
பார்க்க நேர்ந்த
அந்த கணத்தில் விழுந்த
முதல் மழைத்துளி மட்டும்
அப்படியே கிடக்கிறது...

ஈரம் காயாமலும்
எதுவும் நிகழ்த்தாமலும்
மனசுக்குள் விழுந்த
அந்த முதல் துளி
இருக்கும்வரை...

எத்தனையோ அடைமழையில்
குடையின்றி நடந்தபோதிலும்...

எந்த மழைத்துளியும்
அதுபோல்
நனைத்ததில்லை
இதுவரையில் என்னை...