வணக்கம் நண்பர்களே, தமிழில் இது என் முதல் முயற்சி. மழையின் முதல் துளி போல் இது என் முதல் வலைப்பூ. இதில் என்னால் இயன்ற அளவில் அனைத்து செய்திகளையும் உங்களுக்காக படைக்க விரும்புகிறேன். இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் மற்றும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
ஞாயிறு, 11 ஜூலை, 2010
படித்ததில் பிடித்த கவிதை - முதல் மழைத்துளி
சில மழைத்துளி
சுடும்...
சில மழைத்துளி
குளிரும்...
சில மழைத்துளி
மணம் வீசும்...
சில மழைத்துளி
நேசம் பேசும்...
சில மழைத்துளி
பசி போக்கும்...
சில மழைத்துளி
ருசிக்கும்...
சில மழைத்துளி
கவிதை தரும்...
சில மழைத்துளி
கவலை தரும்...
சில மழைத்துளி
பகைக்கும்...
சில மழைத்துளி
நகைக்கும்...
இன்னும் பல
மழைத்துளி விழும்...
இன்னும் பல
வினை செய்யும்...
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்க்க நேர்ந்த
அந்த கணத்தில் விழுந்த
முதல் மழைத்துளி மட்டும்
அப்படியே கிடக்கிறது...
ஈரம் காயாமலும்
எதுவும் நிகழ்த்தாமலும்
மனசுக்குள் விழுந்த
அந்த முதல் துளி
இருக்கும்வரை...
எத்தனையோ அடைமழையில்
குடையின்றி நடந்தபோதிலும்...
எந்த மழைத்துளியும்
அதுபோல்
நனைத்ததில்லை
இதுவரையில் என்னை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக